'நிசப்தம்' தியேட்டரிலா? ஓடிடியிலா? தயாரிப்பாளர் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள காரணத்தினால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடி பிளாட்பார்மில் வெளியாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29ஆம் தேதி ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’ திரைப்படமும் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீசாக உள்ளது

இந்த நிலையில் அனுஷ்காவின் ’நிசப்தம்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் திரைஅரங்கில் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த படமும் ஐந்து மொழிகளிலும் போட்டி ஓடிடியில் வெளியாக போவதாக செய்திகள் வெளியாகின. இந்த செய்தி அனுஷ்கா ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இதுகுறித்து ’நிசப்தம்’ படத்தின் தயாரிப்பாளர் கோனா வெங்கட் அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ’நிசப்தம்’ திரைப்படம் வெளியீடு குறித்து ஊடகங்களில் பல்வேறு யூகங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. திரையரங்கில் வெளியிடுவதற்குத் தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். நீண்ட நாட்கள் சூழ்நிலை அந்த முடிவுக்குச் சாதகமாக இல்லையென்றால், அப்போது ஓடிடி தளத்தை வெளியிடுவதற்கான மாற்றாகப் பார்ப்போம். நல்லது நடக்கும் என நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

More News

தமிழகத்தில் 15 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையில் எவ்வளவு?

தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சற்றுமுன்  சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள நிலையில்

நம்பிக்கை அளிக்கும் விதத்தில் மடகாஸ்கர் அறிமுகப்படுத்திய கோவிட் மூலிகை மருந்து!!! WHO என்ன சொல்கிறது???

கொரோனா சிகிச்சைக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக கடந்த மாதத்தின் நடுப்பகுதியில் மடகாஸ்கர் நாட்டின் அதிபர் ஆண்டரி ராஜோலினா செய்தி வெளியிட்டு இருந்தார்.

WHO - தென் அமெரிக்கா கொரோனாவின் புதிய மையமாகிறது!!! கொரோனாவில் இரண்டாம் இடத்தை பிடித்த ரஷ்யா!!!

கொரோனா பாதிப்பினால் பிரேசில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்து வரும் நிலையில் நேற்று கொரோனா பரவல் வரிசையிலும் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மரணத்தை ஏற்படுத்தும்!!! அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது ஆய்வு!!!

கொரோனா நோய் சிகிச்சைக்கு உரிய பாதுகாப்பான மருந்துகள் எதையும் விஞ்ஞானிகள் இதுவரை பரிந்துரைக்க வில்லை

கொரோனாவை விரட்ட பொருட்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டுமா???

கொரோனா வைரஸ் எந்தெந்த முறைகளில் பரவும் என்ற தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல், ஆரம்பித்தில் இருந்தே அச்சமூட்டும் வகையில் விழிப்புணர்வு செய்யப் படுகிறது.