close
Choose your channels

நிழல்கள் ரவி: நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம்! ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம்!

Tuesday, April 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் நிழல்கள் ரவி 'IndiaGlitz'-க்கு அளித்த பேட்டியில் 'நிழல்கள்' படத்திற்கு பின்னர் நடித்த 'மலையாளம்' படத்தில் நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

நீச்சல் தெரியாமல் கடலில் குதித்த அனுபவம்:

மலையாளப் படத்தில் நடித்தபோது, டைரக்டர் ரவிக்கு நீச்சல் தெரியுமா என்று கேட்டார். உண்மையில் நீச்சல் தெரியாத ரவி, "தெரியும்" என்று பொய் சொன்னார். பின்னர், சூட்டிங் ஸ்பாட் சென்றபோது, டைரக்டர் ரவியை கடலில் குதிக்க சொன்னார். அந்த நேரத்தில் ரவிக்கு தலை சுற்றியது. ஆனால், எப்படியோ சமாளித்து தப்பித்துவிட்டார். மறுநாள், நாலடி ஆழமுள்ள தண்ணீரில் குதிக்க வைத்து படமாக்கினார்கள்.

ரஜினிகாந்த் குதிரை ஓட்டிய ரகசியம்:

'தம்பி' படத்தில், ரவி மாதவியை காரில் கடத்திச் செல்லும்போது, ரஜினிகாந்த் குதிரையில் அமர்ந்து ரவியை துரத்துவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அந்த காட்சியை பார்த்த ரவி, "ரஜினிகாந்த் அருமையாக குதிரை ஓட்டுகிறார்" என்று வியந்து போனார். பின்னர், ரஜினியிடம் "எப்படி சார் குதிரையை ஒட்டிக்கொண்டு வந்தீர்கள்?" என்று கேட்டார். அதற்கு ரஜினி, "எனக்கு எங்க குதிரை ஓட்ட தெரியும்? நான் ஏறி உட்கார்ந்தேன். குதிரை ஓடிக்கிட்டே இருந்துச்சு. அப்படியே வந்துட்டேன்" என்று சிரித்து பதிலளித்தார்😀.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.