close
Choose your channels

'லியோ' படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி உண்டா? நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த தமிழக அரசு..!

Wednesday, October 18, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’லியோ’ படத்திற்கு 7 மணிக்கு காட்சி அனுமதி வழங்குவது குறித்து தனது விளக்கத்தை தமிழக அரசு சற்று முன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தளபதி விஜய் நடித்த ’லியோ’ திரைப்படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு அதிகாலை 4 மணி, 7 மணி காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும் வேண்டும் என்றால் அரசுக்கு நீங்களே வேண்டுகோள் விடுக்கலாம் என்றும் அறிவுறுத்தியது.

இதையடுத்து நேற்று தமிழக அரசு அதிகாரிகளை ’லியோ’ தயாரிப்பாளரின் வக்கீல் குழுவினர் சந்தித்த நிலையில் சற்றுமுன் நீதிமன்றத்தில் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.

இதில் ’லியோ’ திரைப்படத்திற்கு ஏழு மணி காட்சிக்கு அனுமதி வழங்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் ’லியோ’ திரைப்படம் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி தொடங்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.