கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: தமிழக அரசு மேல்முறையீடா?

  • IndiaGlitz, [Wednesday,August 08 2018]

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இன்று காலை உத்தரவிட்டதை அடுத்து அண்ணா சமாதியின் பின்புறம் கருணாநிதிக்கு சமாதி அமைக்கும் பணி தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படுமா? என்ற ஐயம் அரசியல் தலைவர்களிடையே இருந்தது.

இந்த நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யப்போவதில்லை எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது. எனவே சென்னை மெரீனாவில் கருணாநிதியின் சமாதி அமைவது உறுதியாகியுள்ளது.

More News

கருணாநிதிக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் இரங்கல்

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு செய்தி குறித்து பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

கருணாநிதி சந்தித்த 14 இந்திய பிரதமர்கள்

திமுக தலைவர் கருணாநிதி தனது 80ஆண்டு கால அரசியல் வாழ்வில் இந்தியாவின் 14 பிரதமர்களை சந்தித்துள்ளார். வேறு எந்த அரசியல்வாதிக்கும் இல்லாத இந்த  பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு

மெரினாவில் கருணாநிதி சமாதி: கட்டுமான பணிகள் ஆரம்பம்

திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரீனாவில் இடம் ஒதுக்கி தரவேண்டும் என்று தமிழக அரசுக்கு சற்றுமுன்னர் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டனர்

கருணாநிதி மறைவு: விஜய்யின் 'சர்கார்' படக்குழுவின் அதிரடி முடிவு

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதிக்கு மெரினாவில் இடம்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

திமுக தலைவர் கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து அவரது உடலை சென்னை மெரீனாவில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்ய திமுக தரப்பில் நேற்று தமிழக அரசிடம் வேண்டுகோள் விடப்பட்டது