close
Choose your channels

கருணாநிதி மறைவு: விஜய்யின் 'சர்கார்' படக்குழுவின் அதிரடி முடிவு

Wednesday, August 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை மரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழுலகை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசியலிலும் மட்டுமின்றி அவர் திரையுலகிற்கு செய்த சேவையும் மகத்தானது என்பதால் தங்களில் ஒருவரை இழந்தது போல் திரையுலகில் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடந்து வருகிறது. திமுக தலைவரின் மரண செய்தி அறிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த 'சர்கார்' படக்குழுவினர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த செய்திக்குறிப்பில் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து அமெரிக்காவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.