தொடர் மழை எதிரொலி: சென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா?

  • IndiaGlitz, [Saturday,October 06 2018]

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழையும், விட்டு விட்டு மழையும் பெய்து வருகிறது. சென்னையில் நேற்று இரவும் இன்று அதிகாலையும் நல்ல மழை பெய்துள்ளது.

இந்த நிலையில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் இன்று விடுமுறை இல்லை என்றும் அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் திருவாரூரில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும், நீலகிரி மாவட்டட்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும், மதுரை மாவட்டத்தில் மழை காரணமாக ஒரு சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாளை கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை இன்றே வாங்கி வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

More News

விஜய் கூறிய 'நண்பி' தமிழ் சொல்லா? நெட்டிசன்கள் விவாதம்

விஜய் வாயை திறந்து என்ன கூறினாலும் அது சர்ச்சைக்குரியதாக மாறிவிடும் நிலை கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது

'பேட்ட' படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? பகத் பாசில் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' படத்தில் அவ்வப்போது பிரபலங்கள் இணைந்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம். லேட்டஸ்ட்டாக பிரபல நடிகர் சசிகுமார் இந்த படத்தில் இணைந்துள்ளார்.

காதலருடன் '96' படம் பார்த்த லேடி சூப்பர் ஸ்டார்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய '96' திரைப்படம் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சசிகுமார் இணைப்பை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'பேட்ட' திரைப்படத்தில் ஏற்கனவே விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, த்ரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ் போன்ற பிரபலங்கள் நடித்து வரும் நிலையில்

மம்தா பானர்ஜிக்கு மெஸ்ஸி அனுப்பிய சிறப்பு பரிசு

உலகப்புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. கோடிக்கணக்கான கால்பந்தாட்ட ரசிகர்களின் மனதை கவர்ந்த மெஸ்ஸியை கவர்ந்தவ