close
Choose your channels

​​​​​​​நயன்தாராவின் அடுத்த படத்தில் இந்த இரண்டும் கிடையாது: இயக்குனர் தகவல்!

Saturday, November 20, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

லேடி சூப்பர்ஸ்டார் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படம் ’கனெக்ட்’ என்பதும் இந்த திரைப்படத்தை ’மாயா’ என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் என்பவர் இயக்க உள்ளார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இயக்குனர் அஸ்வின் சரவணன் கூறிய தகவலில் இருந்து ’கனெக்ட்’ திரைப்படத்தில் பாடல்கள் மற்றும் காமெடி ஆகிய இரண்டும் கிடையாது என்று தகவல் வெளிவந்துள்ளது. ஏற்கனவே பாடல்கள் இன்றி ‘அந்தநாள்’, ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ உள்பட ஒருசில படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் கதையை தான் லாக்டவுன் நேரத்தில் எழுதியதாகவும் இந்த படத்தின் ஐடியா குறித்து நயன்தாராவிடம் கூறியபோது அவர் அதை ரசித்ததோடு தானே தயாரிப்பதாகவும் கூறியதாகவும் தெரிவித்தார். இந்த படம் ஒரு பான் - இந்தியா படமாக உருவாக இருப்பதால் தான் அனுபம்கேர் மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் நடைபெற உள்ளது என்பதும் இந்த படத்திற்கு பிரித்வி சந்திரசேகர் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment