கேரளாவில் மீண்டும் கனமழை: வானிலை எச்சரிக்கையால் பொதுமக்கள் அச்சம்

  • IndiaGlitz, [Saturday,August 25 2018]

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையால் அம்மாநிலமே உருக்குலைந்து வெள்ளத்தால் சிறுசிறு தீவுகளாக மாறியது. தற்போதுதான் ஓரளவுக்கு வெள்ளம் வடிந்து மீட்புப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள வானிலை எச்சரிக்கையால் அம்மாநில மக்கள் அதிர்ச்சியும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் 'கேரளாவின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கன மழை பெய்யும் என்று சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மீண்டும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுமா? என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

அதேபோல் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் விழுப்புரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

More News

'விஸ்வாசம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பிரேக்கிங் செய்திகளை பின்னுக்கு தள்ளி டிரெண்டில் இருந்து வருகிறது.

விஜய் பாணியில் கேரளாவுக்கு நிவாரண நிதி கொடுத்த பில்கேட்ஸ்

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கோலிவுட் திரையுலகினர் பலர் லட்ச லட்சமாக நிதியளித்து உதவினர்.

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் ரஜினி-விஜய் படங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள '2.0' திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா நடிப்பில் பிரபல இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

விஜயகாந்த் தனது முடிவில் மாறாமல் இருக்க வேண்டும்: துணை முதல்வர் ஓபிஎஸ் 

விஜயகாந்த் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்து மக்களுக்கு சேவை செய்யும்