close
Choose your channels

'விஸ்வாசம்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு எங்கே?

Saturday, August 25, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் அதிகாலை 3.40 மணிக்கு வெளியாகி கடந்த இரண்டு நாட்களாக பிரேக்கிங் செய்திகளை பின்னுக்கு தள்ளி டிரெண்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் 'விஸ்வாசம்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து கடந்த சில நாட்களாக இரண்டாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் ஒரு சிறு ஓய்வுக்கு பின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். மூன்றாம் கட்ட படப்பிடிப்பு புனேவில் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது .இதனையடுத்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என கூறப்படுகிறது

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.