சென்னையில் கொரோனாவுக்கு மேலும் ஒரு காவல்துறை அதிகாரி பலி: அதிர்ச்சி தகவல்

தமிழக தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினமும் சுமார் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவதும் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, இதுவரை தமிழகத்தில் 1200 க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ள நிலையில் அதில் 800 க்கும் மேற்பட்டவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாகும்

இந்த நிலையில் சென்னையில் பாமர மக்கள் மட்டுமின்றி பதவியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவர்களில் ஒருசிலர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாம்பலம் காவல்துறை ஆய்வாளர் பால முரளி என்பவர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காவல்துறை அதிகாரி கொரோனாவால் பலியாகியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். 57 வயதான இவருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் இரண்டாவது காவல்துறை அதிகாரி ஒருவர் பலியாகி உள்ளதால் காவல் துறையினர் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது

More News

சென்னையில் 2015ஆம் ஆண்டு மழையை விட 10 மடங்கு மழை: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சென்னை மக்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் மறந்திருக்க மாட்டார்கள். சென்னையே வெள்ளத்தில் மிதந்தது என்பதும் சென்னையில் மக்கள் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வர

கொரோனாவுக்கு பலியான பெற்றோர்: தனியாக தவிக்கும் மனவளர்ச்சி குன்றிய மகன்

சென்னையை சேர்ந்த மூளை வளர்ச்சி குன்றிய ஒருவரின் பெற்றோர்கள் கொரோனாவால் பலியாகி உள்ளதால் அவருடைய மனவளர்ச்சி குன்றிய ஒரே மகன் கவனிப்பாரின்றி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 

நடிகை பூர்ணா மிரட்டல் விவகாரத்தில் காமெடி நடிகருக்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்

'முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு' முதல் 'காப்பான்' வரை பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாக

கொரோனா நேரத்தில் இதெல்லாம் வேண்டாமே... பெண்களை நோக்கி வேண்டுகோள் வைக்கும் எகிப்து!!!

கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நேரத்தில் எகிப்து அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

90 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 3000க்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இன்றும் 3000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது