close
Choose your channels

ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்.. 'ஜெயிலர்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Friday, January 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் ஜெயிலர் என்ற கேரக்டரில் ரஜினி நடித்து இருப்பதாகவும் அவரது கேரக்டர் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக இருக்கும் என்றும் இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் உருவாக்கி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்றும், அவர் இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகிய மூன்று சூப்பர் ஸ்டார் ஒரே படத்தில் இணைவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், யோகிபாபு, வசந்த் ரவி, அறந்தாங்கி நிஷா, பருத்திவீரன் சரவணன் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.