close
Choose your channels

மேலும் ஒரு நடிகைக்கு கொரோனா பாதிப்பு: டுவிட்டரில் தகவல்!

Monday, January 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில நாட்களாக தமிழ் திரையுலக பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது மேலும் ஒரு நடிகைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் திரையுலகை சேர்ந்த கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா, சத்யராஜ், ஷெரின் உள்பட ஒரு சிலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் தற்போது நடிகை குஷ்புவும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கொரோனா வைரஸ் இரண்டு அலைகளில் இருந்து தப்பித்து வந்த எனக்கு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டேன். தனிமை என்பது மிகவும் வெறுப்பாக இருக்கிறது. எனவே தயவு செய்து யாருக்காவது கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.