இன்றிரவு 7 மணிக்கு ஓவியாவுக்காக சிம்பு தரும் இசை விருந்து

  • IndiaGlitz, [Thursday,January 17 2019]

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஓவியா நடித்து வரும் படங்களில் ஒன்று '90ml'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த படத்தின் பாடல்களை கம்போஸ் செய்யும் பணியில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சிம்பு ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஒலிப்பதிவு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணிக்கு இந்த படத்தின் பாடல்களில் ஒன்றாகிய 'ஃபிரெண்டிடா' என்ற பாடலை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஓவியாவின் படத்திற்காக சிம்பு கம்போஸ் செய்துள்ள இந்த இசை விருந்தை ஓவியா தனது நண்பரக்ளுக்கு இன்றிரவு 7 மணிக்கு அர்ப்பணிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓவியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தை அனித் உதூப் இயக்கி வருகிறார். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நிவிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

 

More News

'விஸ்வாசம்' அஜித்துக்கு காவல்துறை ஆணையர் பாராட்டு

பொங்கல் விருந்தாக கடந்த 10ஆம் தேதி வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

சூர்யாவின் 'காப்பான்' படத்தின் முக்கிய அப்டேட்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'காப்பான்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கி அதன்பின் அடுத்தடுத்த கட்ட படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடந்து வந்தது

உலகின் முதல் அணையை கட்டிய தமிழன்: சூரி வெளியிட்ட மோஷன் போஸ்டர்

கார்த்தி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய ''கடைக்குட்டி சிங்கம்' வெற்றிப்படத்தின் இணை இயக்குநர் M.S.ராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் 'உறங்காப்புலி'.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

சிம்பு நடிப்பில் உருவாகி வந்த 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது

ஜிவி பிரகாஷின் 'வாட்ச்மேன்' படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவராகிய ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான '100% காதல்', 'ஐங்கரன்' மற்றும் 'சர்வம் தாளமயம்' ஆகிய மூன்று திரைப்படங்கள்