close
Choose your channels

பார்த்திபன் அடுத்த படத்தின் டைட்டில் வீடியோ.. வழக்கம்போல் வித்தியாசமான தலைப்பு..!

Friday, January 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ திரைப்படத்தை அடுத்து புதிய படத்தை இயக்கி வருகிறார் என்பதும் அந்த படத்தின் சில தகவல்களை அவரே சமூக வலைதளத்தில் வெளியிட்டார் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசன், ஸ்ரேயா கோஷல், தெருக்குரல் அறிவு உள்ளிட்டோர் பாடல்களை பாடியதாகவும் அவ்வப்போது அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த படத்திற்கு ’FIRST INTERESTING REPORT’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு சுருக்கமாக ’FIR’ என்று அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை அதாவது ஜனவரி 20ஆம் தேதி விடியன் நாதஸ்வரன் வெளியிடுவார் என்றும் பார்த்திபன் அறிவித்துள்ளார். ’குழந்தைகளை மையப்படுத்திய என் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை குழந்தை பருவத்தில் இருந்து இசையின் விசையை அசைத்து பார்க்கும் விடியன் நாதஸ்வரம் வெளியிடுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளை இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.