close
Choose your channels

'பத்து தல' இயக்குனருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பாலிவுட் முன்னணி நடிகர் படத்தை இயக்க வாய்ப்பு..!

Sunday, February 25, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகை சேர்ந்த பலர் தற்போது பாலிவுட் திரைப்படங்களை இயக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பாக முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். சமீபத்தில் கூட ஷாருக்கான் நடித்த ’ஜவான்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்தது என்பதும் அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தியதன் காரணமாக அந்த படம் ரூ.1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் சிம்பு நடித்த ’பத்து தல’ படத்தை இயக்கிய கிருஷ்ணாவுக்கு தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவகன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

’பத்து தல’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் கிருஷ்ணா சொன்ன கதை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு பிடித்து விட்டதை அடுத்து இந்த படத்தை பாலிவுட்டில் படமாக்கலாம் என்று முடிவு செய்தார். இதனையடுத்து அவர் அஜய்தேவ்கன் இடம் கதை சொல்ல வைத்ததாகவும் கிருஷ்ணா சொன்ன கதை அஜய் தேவ்கனுக்கு பிடித்து விட்டதை அடுத்து இந்த படம் உருவாக இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை கிருஷ்ணா தொடங்கிவிட்டதாகவும் அடுத்த மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment