close
Choose your channels

துபாய் சாலையில் மகளுடன் நடனம் ஆடிய 'பட்டுக்குட்டி': வைரல் வீடியோ

Tuesday, May 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

துபாயில் உள்ள சாலையில் மகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ’பட்டுக்குட்டி’ என்று செல்லமாக பரத்தால் அழைக்கப்படும் வெங்கடேஷ் பட் நடனம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3 சீசன்களிலும் நடுவர்களாக வெங்கடேஷ் பட் மற்றும் தாமு ஆகியோர் இருந்து வருகின்றனர் என்பதும் இவர்கள் சிறப்பாக நடுவர் வேலை செய்வது மட்டுமின்றி காமெடியிலும் கலக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வெங்கடேஷ் பட், கோமாளிகளுடன் சர்வசாதாரணமாகப் பழகி, அவர்களுடன் லூட்டி அடிப்பதை பார்ப்பதற்கு இனிமையாக இருக்கும். இந்த சீசனின் கோமாளிகளில் ஒருவரான பரத், வெங்கடேஷ் பட் அவர்களுக்கு பட்டுக்குட்டி என செல்லப்பெயர் வைக்க தற்போது அவருடைய மகளே வெங்கடேஷ் பட் அவர்களை பட்டுக்குட்டி என்று கூப்பிடுவதாக நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் துபாய் சென்ற வெங்கடேஷ் பட் தனது மகளுடன் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடத்தின் முன் நடனமாடியுள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.