சென்னை வருகையின் நோக்கம் என்ன? பவன்கல்யாண் விளக்கம்

  • IndiaGlitz, [Wednesday,November 21 2018]

பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் இன்று சென்னை வந்துள்ளார். தெலுங்கு மாநிலங்களில் தனது கட்சியை விரிவுபடுத்தியது போல் தமிழகத்திலும் அவர் தனது கட்சியை பிரபலப்படுத்த வருகை தந்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ளன. இனிமேல் இங்கு புதிய கட்சிகள் தேவையில்லை. இருப்பினும் தென்னிந்திய அளவில் கட்சிகளுக்குள் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தென்னிந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்க தென்னிந்திய அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகவும் தான் சென்னை வந்துள்ளேன்.

இப்போதும் எதிர்காலத்திலும் எனது கட்சியை தமிழகத்தில் விரிவுபடுத்தும் திட்டம் இல்லை. நான் கட்சி ஆரம்பித்தவுடன் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ளேன், ஆனால் பக்கத்தில் மாநிலத்தில் உள்ளவர்கள் என்ன நினைக்கின்றார்கள்? என்பதை நான் அறியவில்லை. எனவே தமிழக மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவே சென்னை வந்துள்ளேன்' என்று பவன்கல்யாண் கூறியுள்ளார்.

 

More News

செல்போன் நெட்வொர்க் மூலம் கஜா நிவாரண நிதி: சிம்புவின் புதிய ஐடியா

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிக்கு அரசியல் கட்சிகள், திரையுலகினர் உள்பட பலர் லட்சங்களிலும் கோடிகளிலும் உதவி செய்து வருகின்றனர்.

ஆணவ படுகொலையான நந்தீஷ் குடும்பத்திற்கு குவியும் உதவிகள்

ஒசூர் அருகேயுள்ள சூடகொண்டப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த நந்தீஷ் - சுவாதி ஆகிய இருவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

8 நிமிட சிங்கிள் ஷாட்: விஜய்சேதுபதியை பாராட்டிய பிரபல நடிகர்

விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'சீதக்காதி' திரைப்படம் வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி மிகப்பெரிய பாராட்டை பெற்றுள்ளதால்

ஷங்கர்-வடிவேலு சமரசம்: மீண்டும் தொடங்கும் 'இம்சை அரசன் 2'

வடிவேலு நடிப்பில் ஷங்கர் தயாரிப்பில் இயக்குனர் சிம்புதேவன் இயக்கி வந்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது

ஏ.ஆர்.ரஹ்மானின் கஜா புயல் நிவாரண நிதி

கஜா புயலினால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற திரையுலகினர் ஏராளமான நிதியுதவிகளை செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.