ராதாரவிக்கு பதிலடி கொடுத்த நயன்தாரா?


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா ரசிகர்களும், திரையுலகினர்களும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், திமுக அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இருப்பினும் ராதாரவி மீது நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து கொண்டிருக்கின்றது. ராதாரவியின் பேசியதை விட அவரது இந்த அருவருப்பான பேச்சுக்கு கைதட்டியவர்களுக்கும் கடும் கண்டங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள 'ஐரா' படத்தின் புரமோஷன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், 'உன்னை மாதிரி ஆளுங்கனாலதான் ஃபேமிலியை சப்போர்ட் பண்ணனும் நினைக்கின்ற பொம்பளைங்க வெளியே போய் நிம்மதியாக வேலை செய்ய முடியலை' என்று நயன்தாரா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் 'ராதாரவிக்கு நயன்தாரா கொடுத்த பதிலடியாகவே கருதுகின்றனர். சரியான நேரத்தில் இந்த வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது
மேலும் இந்த விவகாரம் குறித்து நயன்தாரா இதுவரை எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
A moment from #Airaa! #LadySuperstar #Nayanthara pic.twitter.com/kFbjwf11AH
— IndiaGlitz - Tamil (@igtamil) March 24, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments