தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்த 'பேட்டைக்காளி' நடிகர்!

  • IndiaGlitz, [Wednesday,December 21 2022]

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிரோம்.

குறிப்பாக இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ’பேட்டைக்காளி’ என்ற வெப்தொடரில் தொடரில் நடித்த ஆண்டனி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பேட்டைக்காளி’ வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆண்டனி இந்த படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தனுஷ் படம் முழுவதும் ஒரு பைக்கை பயன்படுத்துகிறார் என்றும் அந்த பைக்கை கிட்டத்தட்ட ஒரு கேரக்டர் போலவே இந்த படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More News

அஜித்தின் 'துணிவு: செம அப்டேட் கொடுத்த ஜிப்ரான்!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம், அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரு படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன 

அஜித் ரீல் மகளை அடுத்து ஹிப்ஹாப் தமிழா படத்தில் இணைந்த பிரபல நடிகை!

 தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது

ஐஸ்வர்யா ராஜேஷின் 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ் என்பதும் அவர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

டாம் குரூஸ் பாணியில் ஆக்சன் காட்சிகள்: வேற லெவலில் 'தளபதி 67'

ஹாலிவுட்டில் உருவாகும் டாம் குரூஸ் படங்களில் ஆக்ஷன் காட்சிகளுக்கு இணையாக 'தளபதி 67' படத்தின் ஆக்சன் காட்சிகள் உருவாக்கப்படும் என்ற தகவல் தற்போது கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரோஜா-செல்வமணி திருமணத்தில் அஜித்-ஷாலினி.. அபூர்வ புகைப்படம்

 கடந்த 90 களில் ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரோஜா தன்னை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் செல்வமணியை கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.