close
Choose your channels

அஜித்தின் 'துணிவு: செம அப்டேட் கொடுத்த ஜிப்ரான்!

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படம், அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த இரு படங்களின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் நேற்று ‘வாரிசு’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியான நிலையில் சித்ராவின் குரலில் உருவான இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அதேபோல் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் இடம்பெற்ற இரண்டு ஏற்கனவே வெளியாகி உள்ள நிலையில் தற்போது மூன்றாவது பாடல் குறித்த அறிவிப்பை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.

‘கேங்க்ஸ்டா’ என்று தொடங்கும் இந்த பாடலை ஷபீர் பாடியுள்ளதாகவும், இந்த பாடல் மிக விரைவில் வெளியாக இருப்பதாக ஜிப்ரான் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே ‘துணிவு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா’ மற்றும் ‘காசேதான் கடவுளடா’ ஆகிய இரண்டு பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos