close
Choose your channels

தனுஷின் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்த 'பேட்டைக்காளி' நடிகர்!

Wednesday, December 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது என்பதை பார்த்து வருகிரோம்.

குறிப்பாக இந்த படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்திற்கு சென்று உள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் அருள் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது ’பேட்டைக்காளி’ என்ற வெப்தொடரில் தொடரில் நடித்த ஆண்டனி இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’பேட்டைக்காளி’ வெப் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த ஆண்டனி இந்த படத்திலும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் தனுஷ் படம் முழுவதும் ஒரு பைக்கை பயன்படுத்துகிறார் என்றும் அந்த பைக்கை கிட்டத்தட்ட ஒரு கேரக்டர் போலவே இந்த படத்தில் இடம்பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.