close
Choose your channels

திரைப்படத்தில் மட்டுமல்ல.. நிஜத்திலும் தொழிலதிபர் தான்.. 'பிச்சைக்காரன்' நடிகையின் சக்சஸ் ஸ்டோரி..!

Sunday, February 26, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தில் தொழிலதிபர் கேரக்டரில் நடித்த நடிகை நிஜத்திலும் ஒரு தொழிலதிபர் என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் தாயாராக தீபா என்ற நடிகை நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் தீபா தொழிலதிபராக நடித்திருப்பார் என்பதும் இவர் உடல்நலம் இல்லாமல் இருப்பதன் காரணமாகத்தான் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ போல் சில நாட்கள் வாழ்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை தீபா, ரஜினியின் ‘அருணாச்சலம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ பாண்டியராஜனின் ’பசங்க 2’, சிவகார்த்திகேயனின் ’ரஜினி முருகன்’ உள்பட பல திரைப்படங்கள் நடித்துள்ளார். ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்திற்கு பிறகு சசி இயக்கத்தில் உருவான 'சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற திரைப்படத்திலும் தீபா அம்மா கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள தீபா தனது கணவருடன் சேர்ந்து தொழிலதிபராகியுள்ளார். பெண்களுக்கான ஜீன்ஸ் தயாரிக்கும் தொழிலை செய்து வரும் இவர் அமெரிக்காவில் தற்போது வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் செம மாடர்னாக இருக்கும் இவரா பிச்சைக்காரன் திரைப்படத்தின் அம்மா நடிகை? என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.