close
Choose your channels

எனக்கு பிடித்த நடிகரே விஜய் தான்..! பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

Wednesday, February 12, 2020 • தமிழ் Comments

எனக்கு பிடித்த நடிகரே விஜய் தான்..! பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி.

முன்னாள் மத்திய அமைச்சரும், பி.ஜே.பி-யின் மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``கோவையில் 1998-ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது." என்று கூறினார்.  

அதன்பிறகு டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். "டெல்லி தேர்தலை பற்றி பார்க்கும் போது கடந்த தேர்தலைவிட, தற்போதைய தேர்தலில் பா.ஜ.க  அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுள்ளது".என்றார். நடிகர் விஜயை பற்றியும் நெய்வேலியில் நடந்த பாஜக போராட்டம் பற்றியும் கேள்வி கேட்கப்பட்ட போது அவர்,"நடிகர் விஜய் வீட்டில் வருமான வரிசோதனை என்பது வழக்கமான நடைமுறைதான். எங்களுக்கும், விஜய்க்கும் எந்தப் பகையும் இல்லை" என்றார்.  

மேலும் அவர், "நெய்வேலி சுரங்க ஆலைக்கு யார் சென்றாலும், கடும் கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் சினிமா ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்தது எப்படி சரியாக இருக்கும். நெய்வேலி சுரங்க நிர்வாகம் சினிமா ஷூட்டிங்கிற்கு மத்திய மந்திரியைக் கேட்டு அனுமதி கொடுக்கவில்லை, தன்னிச்சையான அமைப்பு என்பதால் அந்த நிர்வாகமே அனுமதி கொடுத்துள்ளது மற்றபடி விஜய் படங்களை நானே ரசித்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் நடிகர் விஜய்யை நான் நேசிக்கிறேன். அப்படி இருக்கும்போது அவரை நான் எப்படி வெறுக்க முடியும்?” என்று பதில் கூறினார்.

Get Breaking News Alerts From IndiaGlitz