close
Choose your channels

'பொன்னியின் செல்வன் 2' இரண்டு நாள் வசூல் எவ்வளவு? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Sunday, April 30, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தயாரிப்பில் உருவான ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் நேற்று முன் தினம் வெளியாகி மிகப்பெரிய பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படம் முதல் நாளிலேயே 60 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது முதல் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதனை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய நான்கு நாட்களில் இந்த படம் 150 முதல் 200 கோடி ரூபாய் வரை வசூல் செய்ய வாய்ப்பு இருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் முதல் பாகத்தின் வசூல் சாதனையை இரண்டாம் பாகம் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.