close
Choose your channels

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா இந்த நாட்டிலா?

Sunday, December 19, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் முதல்கட்டமாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை இதுவரை இல்லாத அளவில் மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

அந்த வகையில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வெளிநாட்டில் நடைபெற உள்ளதாகவும் குறிப்பாக லண்டன் மற்றும் துபாய் ஆகிய இரு இடங்களில் ஒன்றில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. விரைவில் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் இடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 500 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.