விஜய்யின் 'வாரிசு' படத்துடன் கனெக்சன் ஆனது 'பொன்னியின் செல்வன்': எப்படி தெரியுமா?

தளபதி விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்துடன் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ படம் கனெக்சன் ஆனது குறித்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’பொன்னியின் செல்வன்’. இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. 

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஆந்திராவில் இந்த படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விக்ரம், கார்த்தி மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களும் கலந்து கொண்டார்.

இந்த படத்தின் இரண்டாவது பாடலை பார்த்ததும் இந்த படத்தின் மீது ஈர்ப்பு கொண்ட தில் ராஜூ, இந்த படத்தை தெலுங்கு மாநிலங்களில் ரிலீஸ் செய்யும் உரிமையை மிகப் பெரிய தொகை கொடுத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. தில்ராஜூ அவர்கள் ’பொன்னியின் செல்வன்’ படத்தின் தெலுங்கு உரிமையை பெற்றிருப்பதை அடுத்து இந்த படம் தெலுங்கு மாநிலங்களில் மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு நல்ல வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மனைவியுடன் ரொமான்ஸ், செம புகைப்படங்களை வெளியிட்ட சாண்டி: இன்று என்ன விசேஷம் தெரியுமா?

 தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

தனுஷின் 'திருச்சிற்றம்பலம்': முதல் நாளை விட அதிகமான இரண்டாம் நாள் வசூல்!

 தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியான நிலையில் இந்த படம் முதல்நாளில் ரூ 9 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்தது என்பதும் அதில் 6 கோடி ரூபாய் தமிழகத்தில்

அஜித்தின் 'ஏகே 61' கிளைமாக்ஸ் இந்த பள்ளத்தாக்கில் தான்: எச்.வினோத்தின் வேற லெவல் திட்டம்!

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படப்பிடிப்பில் அஜீத், மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர்

'சூர்யா 42' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு: யார் யார் இருக்காங்க பாருங்க!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 42' படம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

பேருந்தில் பெண் பயணிகளை முறைத்து பார்த்தால் கைது: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

பேருந்துகளில் பயணம் செய்யும் பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தாலோ, தொந்தரவு செய்தாலோ விசிலடித்து அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டாலோ காவல் துறையிடம்  புகார் கொடுக்கலாம்