close
Choose your channels

மனைவியுடன் ரொமான்ஸ், செம புகைப்படங்களை வெளியிட்ட சாண்டி: இன்று என்ன விசேஷம் தெரியுமா?

Sunday, August 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவரான சாண்டி மாஸ்டர் தனது மனைவியுடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சில்வியா என்பவரை கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சாண்டி-சில்வியாவின் 5வது திருமணநாளை முன்னிட்டு மனைவியுடன் எடுத்த ரொமன்ஸ் புகைப்படங்களையும் தனது 2 குழந்தைகளுடன் இருந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் சாண்டி பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக ’லாலா’ என்று கூறப்படும் அவரது மூத்த மகள் நன்றாக வளர்ந்து இருப்பதை பார்த்து அதற்குள் இவ்வளவு பெரிய பெண்ணாகி விட்டார் என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகின்றன. மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக சாண்டி மாஸ்டர் பதிவு செய்திருப்பதாவது:

ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெறுத்து ஓடி போவா.....
இவ வெள்ளரிக்கா வித்துக்கூட வீடு காத்து வாழ்வா ...

சாண்டி பதிவு செய்துள்ள இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.