close
Choose your channels

ஸ்லிம் பியூட்டியாக மாறிவிட்ட நடிகை பூனம் பாஜ்வா… வைரலாகும் நீச்சல்குளம் புகைப்படம்!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவில் ஒருசில திரைப்படங்களில் மட்டுமே நடித்து ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பை பெற்றவர்தான் நடிகை பூனம் பாஜ்வா. இதற்கு முன்பு சற்று உடல்வாகுவான தோற்றத்தில் இருந்த இவர் தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த வகையில் அவர் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடலிங் துறையைச் சேர்ந்த பூனம் பாஜ்வா கடந்த 2005 இல் தெலுங்கு சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், கன்னட மொழிகளிலும் வரவேற்பு பெற்ற நடிகையாக வலம்வந்தார். அந்த வகையில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான “சேவல்“ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர் தொடர்ந்து “தெனாவெட்டு“, “கச்சேரி ஆரம்பம்“, “தம்பிக்கோட்டை“, “துரோகி“, “முத்தினக் கத்திரிக்காய்“ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் சிறிதுகாலம் தமிழ் சினிமாவில் காணாமல் போன இவர் தற்போது ஸ்லிம் பியூட்டியாக மாறியிருக்கிறார். இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கிய இவர் “கோமாளி“, “அரண்மனை 2“, “ரோமியோ ஜுலியட்“ போன்ற திரைப்படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார். மேலும் சமூகவலைத் தளங்களில் படு ஆக்டிவாக இருந்துவரும் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு ஏராளமான ஃபாலோயர்கள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் நடிகை பூனம் பாஜ்வா நீச்சல் குளத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் படு ஒல்லியான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் நடிகை பூனம் பாஜ்வாவிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு அவரது நீச்சல் குளம் புகைப்படத்தை வைரலாக்கியும் வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment