close
Choose your channels

அரபிக்குத்து பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட நடிகை… வைரலாகும் வீடியோ!

Saturday, February 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப் ஷாட்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தப் பக்கத்தை திருப்பினாலும் “ஹலமதி ஹபிபோ“ என்றுதான் ஒலித்து வருகிறது. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற “அரபிக்குத்து“ பாடலுக்கு இளசுகள் முதல் திரைப்பிரபலகங்கள் வரை பலரும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வரிசையில் புதிதாக நடிகை வேதிகாவும் இணைந்துள்ளார்.

பாலிவுட் நடிகையான வேதிகா தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “மதராசி“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து “முனி“ அடுத்து “காளை“, “சக்கரக்கட்டி“,, “பரதேசி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். தற்போது சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகை வேதிகா தற்போது “பீஸ்ட்“ திரைப்படத்தின் முதல் சிங்கிள்ஸ் பாடலான “அரபிக்குத்து“ பாடலுக்கு கடற்கரையில் நின்றவாறு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் 9 கோடி பார்வையாளர்களை பெற்று 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்திருக்கிறது.

இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்“ திரைப்படம் முன்னதாக ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் எனக் கூறப்பட்ட நிலையில் வரும் தமிழ்ப் புத்தாண்டிற்கு இந்தத் திரைப்படம் வெளிவருமா? என்று சுவாரசியமான எதிர்பார்ப்பையும் சில ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.