close
Choose your channels

இதையெல்லாம் கமல் தட்டி கேட்கவே மாட்டாரா? எல்லை மீறும் பூர்ணிமா - மாயா..!

Tuesday, November 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் சில தவறுகளையும் அநியாயங்களையும் தட்டி கேட்கவில்லை என பார்வையாளர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் எல்லையை மீறிய மேலும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே பூர்ணிமா மற்றும் மாயா ஆகிய இருவரும் மைக்கை கழட்டிவிட்டு ரகசியமாக பேசிய வீடியோ வைரலானது. அதை கமல்ஹாசன் தட்டி கேட்கவே இல்லை. ஆனால் பிக்மாஸ், மைக்கை மாட்டுங்கள் என்று உத்தரவிட்டார். அதேபோல் வினுஷா குறித்து நிக்ஸன் சர்ச்சைக்குரிய வகையில் விஷயத்தையும் கமல்ஹாசன் கண்டுகொள்ளவே இல்லை. பிக்பாஸ் தான் ஒரு டாஸ்க் மூலம் அதை வெளியே தெரியும்படி செய்தார்.

இதனால் பார்வையாளர்கள் கமல் மீது அதிருப்தி அடைந்துள்ள நிலையில் சற்றுமுன் வெளியான வீடியோவில் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் மைக்கை ஓரமாக நகர்த்தி விட்டு காதுக்குள் ரகசியமாக பேசுகின்றனர். விதிகளை மீறி உள்ள இந்த விவகாரம் குறித்து இந்த வாரமாவது கமலஹாசன் அவர்களை கண்டிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விதிகளை விசித்ரா உள்பட ஒரு சில போட்டியாளர்கள் மீறும் போது மட்டும் கேப்டன் தினேஷ் தட்டிக் கேட்கும் போது மாயா மற்றும் பூர்ணிமாவை அவர் கண்டுகொள்ளாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. மொத்தத்தில் எல்லை மீறும் மாயா பூர்ணிமாவை கமல்ஹாசன் இந்த வாரமாவது தட்டிக் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment