நிர்வாண பார்ட்டியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள்: போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு

  • IndiaGlitz, [Wednesday,September 25 2019]

கோவாவில் நிர்வாண பார்ட்டி நடக்கவிருப்பதாகவும், இந்த பார்ட்டியில் இந்திய மற்றும் வெளிநாட்டு பெண்கள் 25க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளவிருப்பதாகவும் போஸ்டர் ஒன்று கோவாவின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒருசில வெளிநாடுகளில் நிர்வாண பார்ட்டி என்பது சஜகமாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியாவில் இவ்வகை பார்ட்டி நடந்ததாக தெரியவில்லை இந்த நிலையில் கோவாவின் வடக்குப் பகுதியில், நிர்வாண பார்ட்டி நடக்க இருப்பதாகவும் இதில் 15 வெளிநாட்டு பெண்களும் 10க்கும் மேற்பட்ட இந்தியப் பெண்களும் கலந்துகொள்ள இருப்பதாகவும் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த பார்ட்டி எங்கு எப்போது நடக்க இருக்கிறது என்கிற விவரம் அந்த போஸ்டரில் இல்லை. இந்த போஸ்டர்களை பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த போஸ்டர் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மனோகர் ஆகியோர்களுக்கு கோவா மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் பிரதிமா கோட்டின்ஹோ கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து கோவா அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வரின் உத்தரவின்பேரில் கோவா போலீசார் மாநிலம் முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். கோவாவில் இதுபோன்ற நிர்வாண பார்ட்டிகளை நடத்த அனுமதிக்க முடியாது என்றும், போஸ்டர் ஒட்டியவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவா போலீசார் தெரிவித்துள்ளனர்.

More News

உலகின் முதல் சொகுசு தியேட்டர்: அபிராமி ராமநாதனின் மெகா திட்டம்

சென்னையின் முக்கிய திரையரங்க வளாகங்களில் ஒன்றான அபிராமி திரையரங்கில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ள நிலையில் தற்போது நான்கு தியேட்டர்களுடன்

என் 7ம் அறிவை செருப்பால அடிக்கணும்: பார்த்திபன்

பார்த்திபன் நடித்து, இயக்கி தயாரித்த 'ஒத்த செருப்பு 7' திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி ஊடகங்களின் நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஷெரின் காதல் கடிதத்தை குப்பை தொட்டியில் தேடிய தர்ஷன்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரின் எழுதிய காதல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கடிதத்தை ஷெரின் சுக்குநூறாய் கிழித்து குப்பைத்தொட்டியில் போட்டார்

பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' நடிகை!

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 'ரஜினி முருகன்' மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தற்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார்.

அமிதாப்பச்சனுக்கு திரையுலகின் மிகப்பெரிய விருது! மத்திய அமைச்சர் அறிவிப்பு

திரைப்படத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுக்கு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் அறிவித்துள்ளார்.