close
Choose your channels

'வலிமை'யுடன் மோதும் 'பீஸ்ட்' நாயகியின் படம்!

Wednesday, September 29, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அதே தினத்தில் எஸ்எஸ் ராஜமவுலியின் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படம் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் தல அஜித்தின் ’வலிமை’ திரைப்படம் சோலோவாகி வெளியாகி வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் திடீரென பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த ’ராதே ஷ்யாம்’ என்ற திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாவதால் ’வலிமை’ படத்தின் வசூல் பாதிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ராதேஷ்யாம் நாயகி பூஜா ஹெக்டே தற்போது விஜய் நடித்து வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் 350 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள ‘ராதே ஷ்யாம்’ திரைப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.