பிரபாஸின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Sunday,February 14 2021]

’பாகுபலி’ மற்றும் ’பாகுபலி 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகராக மாறியவர் நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ’ராதே ஷ்யாம்’ ‘சலார்’ மற்றும் ஆதிபுருஷ்’ ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ’ராதே ஷ்யாம்’ படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழுவினர் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். இந்த படம் ஜூலை 30ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு ஜஸ்டின் பிரபாகரனும் ஹிந்தி பதிப்பிற்கு மனோஜ் என்பவரும் இசையமைத்து வருகின்றனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் என்பவரும் படத்தொகுப்பாளராக வெங்கடேஸ்வர ராவ் என்பவரும் பணிபுரிந்து வருகின்றனர்.

More News

சிம்புவுடன் ஜோடி சேருவது த்ரிஷாவா? நயன்தாராவா?

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக த்ரிஷா அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 

முன்னாள் முதல்வர் பேரனை திருமணம் செய்யும் தனுஷ் பட நடிகை!

தனுஷ் நடித்த 'பட்டாஸ்' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை, முன்னாள் முதல்வர் ஒருவரின் பேரனை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

'குக் வித் கோமாளி' பிரபலத்தின் மனைவி புகைப்படம்: இவருக்கு திருமணம் ஆகிவிட்டதா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குக்'களும், கோமாளிகளும் பார்வையாளர்கள்

காஜல் அகர்வாலின் அடுத்த ஓடிடி படம் குறித்த தகவல்!

காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய ஓடிடி திரைப்படமான 'லைவ் டெலிகாஸ்ட்' ஹாட்ஸ்டாரில் நேற்று வெளியானது என்பதும் த்ரில் கதையம்சம் கொண்ட

தனுஷின் 'கர்ணன்' ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாக்கிய 'கர்ணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் முடித்து