மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு 14 நாள் சிறை!

  • IndiaGlitz, [Thursday,March 28 2019]

கேரளாவில் கோழிக்கோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரை 14 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அனைத்து வயது பெண்களும் சபரிமலை சென்று ஐயப்பனை வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிலையில் சபரிமலையில் பெண்கள் வழிபட பலர் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையிலும் இறங்கினர். இதுகுறித்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது

இந்த நிலையில் சபரிமலை வன்முறை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரகாஷ்பாபு. இவர் சமீபத்தில் மக்களவை தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வேட்புமனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் சபரிமலை வன்முரை வழக்கில் இவரை 14 நாட்கள் சிறையில் அடைக்க பத்தனம்திட்டா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

யார் கற்றப்பரம்பரை; யார் குற்றப்பரம்பரை? தமிழிசைக்கு கருணாஸ் கேள்வி

சமீபத்தில் பாஜக தமிழக தலைவரும், தூத்துகுடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்திரராஜன், 'குற்றப்பரம்பரை' குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாக விமர்சனங்கள் எழுந்தன.

என்.ஜி.கேவுடன் மோத விரும்பாத பிரபல நடிகரின் படம்!

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ராதா'வை தூக்க சொன்ன விஷாலுக்கு ராதாரவி பதிலடி!

சமீபத்தில் நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை ஒட்டுமொத்த திரையுலகமும் கண்டனம் தெரிவித்தது.

ராகுல்காந்தியை சந்தித்த பிரபல நடிகர்! காங்கிரஸில் இணைய திட்டம்

.பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான சத்ருஹன்சின்ஹா, கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் இருந்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாக விமர்சனம்  செய்து வந்தார்

'தளபதி 63' படத்தில் ஷாருக்கான் நடிப்பது உண்மையா? படக்குழுவினர் விளக்கம்

விஜய் நடிப்பில் உருவாகி இவரும் 'தளபதி 63' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் கெள்ரவ சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக நேற்று வெளியான செய்திக்கு படக்குழு இன்று மறுப்பு தெரிவித்துள்ளது.