close
Choose your channels

என்.ஜி.கேவுடன் மோத விரும்பாத பிரபல நடிகரின் படம்!

Thursday, March 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடி அரசியல் படமான இந்த படத்தை சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இதே மே 31ஆம் தேதி விஜய் தேவரகொண்டாவின் 'டியர் காம்ரேட்' என்ற திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழ் , மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது

இந்த நிலையில் சூர்யாவின் 'என்.ஜி.கே' திரைப்படம் மே 31ஆம் தேதி வெளியாவதால் 'டியர் காம்ரேட்' படத்தை தமிழில் மட்டும் ஒரு வாரம் கழித்து அதாவது ஜூன் 6ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த 'டியர் காம்ரேட்' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அதில் உள்ள லிப்லாக் காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.