என்னது? பிரதமர் ஹோலி கொண்டாட மாட்டாரா??? விரிவான செய்திகள் உள்ளே…


இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் உறுதிப் படுத்தி இருந்தார். இதன் எதிரொலியாக, பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை எனத் தற்போது தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் “உலகம் முழுவதும் கொரோனா பரவலை அடுத்து மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க வேண்டும் என அறிஞர்கள் கூறியுள்ளனர். எனவே இந்தாண்டு ஹோலி பண்டிகையில் கலந்து கொள்ளப் போவதில்லை” எனப் பதிவிட்டுள்ளார். 

முன்னதாகப் பிரமதர் கொரோனா பற்றி எதுவும் பேசாமல் சமூக ஊடகங்களில் இருந்து விலகுவதைப் பற்றி பேசி வருகிறார் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார். இந்நிலையில் பிரதமரின் கொரோனா பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

இந்துக்களின் பெரிய பண்டிகையான ஹோலி பங்குனி மாதத்தின் கடைசி பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை மார்ச் 10 அல்லது 11 ஆம் தேதிகளில் கொண்டாடப் பட இருப்பதால் பிரதமர் மக்கள் ஒன்றாகக் கூடுவதைத் தவிர்க்க இப்படி செய்ய விருப்பதாகப் பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 


 

More News

மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் ரஜினி: இன்று முக்கிய அறிவிப்பா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இன்று ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை அவர் சந்திக்கிறார்.

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழ் திரைப்பட நடிகர் கைது 

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தமிழ் திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா சோலார் பேனல்கள் உதவியால் உப்புத் தண்ணீரை குடிநீராக்கிக் குடித்த மக்கள்..!

ஒரு அரசு சாரா நிறுவனமானது சோலார் பேனல்கள் உதவியோடு உப்பு நீரை தூய்மையான குடிநீராக்கும் திட்டத்தை கென்யாவில் தொடங்கியுள்ளது. இதன் மூலம் 35,000 மக்கள் நல்ல குடிநீர் கிடைத்து அதை பருகி மகிழ்ந்தனர்.

கொரோனா அச்சம்.. ஒரு ஊரே வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடக்கும் அவலம்..!

இங்குள்ள தெருக்கள் வீடுகள் எல்லாம் மிக அமைதியாக எதோ கைவிடப்பட்ட நகரம் போல் காட்சியளிப்பதாக ஹைதராபாத் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சாகச பிரியரான காட்டு மனிதன் பேர் கிரில்ஸ்; தெரிவிக்க விடும் திரில் பட்டியல்

முதுகு எலும்பு மூன்றாக உடைந்து மறுபடியும் எழுந்து நடக்கவே முடியாது என மருத்துவர்கள் கைவிரித்த ஒரு மனிதன்,