close
Choose your channels

கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: தமிழ் திரைப்பட நடிகர் கைது 

Thursday, March 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த தமிழ் திரைப்பட நடிகர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த திரைப்பட நடிகரும் அரசியல் கட்சி ஒன்றின் பேச்சாளருமான சூரியகாந்த் என்பவரது மகன் விஜய் ஹரிஸ். இவர் தற்போது ‘நாங்களும் நல்லவங்க தான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் ஹரிஸ் கல்லூரி மாணவி ஒருவருக்கு மாதுளை பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து கல்லூரி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் திரைப்பட நடிகர் விஜய் ஹரிஸ் கைது செய்யப்பட்டார்.

நடிகர் விஜய் ஹரிஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர். திரைப்பட நடிகர் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.