6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டா கணக்கு: மணிரத்னம் பட நடிகர் ஆவேசம்!

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

பிரபல மலையாள நடிகரும் மணிரத்தினம் இயக்கிய ராவணன் உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தவருமான நடிகர் பிருத்விராஜ் தனது 6 வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கியுள்ளது குறித்து ஆவேசமாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியபோது ’என்னுடைய ஆறு வயது மகள் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பதாகவும் அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்த இன்ஸ்டா பக்கம் எங்களால் நிர்வாகம் செய்யப்படும் பக்கம் அல்ல என்றும் ஆறு வயது சிறுமி ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனது மகள் வளர்ந்த பிறகு இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானித்து கொள்வார் என்றும், இந்த போலியான கணக்கை உண்மை என நம்பி இந்த கணக்கை யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறு வயது குழந்தையின் பெயரில் போலியாக கணக்கு தொடங்குவது வெட்கக் கேடானது என்றும் குழந்தைகளை குழந்தைகளாகவே இருக்க விடுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். நடிகர் பிரத்விராஜின் இந்த ஆவேசமான இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

மறுபடியும் வைல்ட்கார்ட் போனா, வச்சு செய்வேன்: சுரேஷ் சக்கரவர்த்தி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சவாலான போட்டியாளர்களில் ஒருவராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி கடந்த ஞாயிறன்று திடீரென வெளியேறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

2 மாதமா கோமாவில் இருந்தவரை குணப்படுத்திய சிக்கன் துண்டு… சுவாரசியச் சம்பவம்!!!

ஒருவர் உடல் நலமின்றி கோமாவிற்கே சென்றாலும் அவருக்குப் பிடித்தமான விஷயங்களை கேட்கும்போது அல்லது பிடித்தமானவர் அருகில் இருக்கும்போது அவர் சுயநினைவுக்கு வர வாய்ப்பிருக்கிறது.

கணவருக்கு விவாகரத்து கொடுத்து, காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி!

சினிமாவில் வருவது போன்றே கணவருக்கு விவாகரத்து கொடுத்து அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

ரஜினி படம் போன்ற அறிமுகக்காட்சி: சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் குறித்த ஆச்சரிய தகவல்

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஈஸ்வரன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது: விபிஎப் கட்டணத்தை ஏற்ற க்யுப் குறித்து பாரதிராஜா!

விபிஎப் விவகாரம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் திடீரென கியூப் நிறுவனம் நவம்பர் மாதம்