'கேங் லீடர்' நாயகியை இயக்குனரிடம் பரிந்துரை செய்த சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Friday,September 27 2019]

சிவகார்த்திகேயன் நடித்த ’நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. எனவே இந்த படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஒரு படத்தை ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர் நெல்சன் இயக்க உள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதனை அடுத்து இந்த படத்தின் நாயகியை சிவகார்த்திகேயனே இயக்குனரிடம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு தமிழ் நன்றாக பேசக்கூடிய ஒரு குடும்பத்தனமான லுக் உள்ள நாயகியை படக்குழுவினர் தேடிவந்த நிலையில் தெலுங்கில் நானி நடித்த ’கேங் லீடர்’ என்ற படத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்கா அருள் மோகன் என்பவரின் புகைப்படத்தை தான் பார்த்ததாகவும், இந்த படத்திற்கு பிரியங்கா பொருத்தமாக இருப்பார் என்று பரிந்துரை செய்ததாகவும் சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் பிரியங்கா குறித்து விசாரித்தபோது அவர் சென்னையில்தான் இருப்பதாகவும் தமிழ் நன்றாக பேசுவதாகவும் தெரிய வந்ததாகவும் அவரை இந்த படத்தின் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் ’ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மேலும் ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வரும் அவர் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
 

More News

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படமான 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும்

பார்த்திபனின் அடுத்த படத்தில் சதீஷ் நாயகியா?

இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டதாக தெரிகிறது. பார்த்திபனின் அடுத்த படம் ரொமான்ஸ் படமாக இருக்கும்

பிரபல எழுத்தாளர் மகரிஷி காலமானார்: ரஜினி படமாக மாறிய இவரது நாவல்

பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமானர். அவருக்கு வயது 87

விஜய்யின் 'தங்கமான' பாணியை பின்பற்றிய சூர்யா!

தளபதி விஜய், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தினத்தில் அந்தப் படத்தில் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களுக்கும் தங்க நாணயம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

பாஜகவில் இணையும் கமல்-ரஜினி பட நாயகி!

கோலிவுட் திரையுலகில் உள்ள பல நடிகர், நடிகைகள் அரசியலில் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த பல வருடங்களாக அரசியலில் இருந்து வருபவர்களில் ஒருவர் நடிகை விஜயசாந்தி.