close
Choose your channels

விஜய்க்கு வில்லனாக நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எவ்வளவு சம்பளம்?

Saturday, September 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையில் வெளியாக உள்ள நிலையில், அவரது அடுத்த படமான ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’தளபதி 64’படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மேனன் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தின் வில்லனாக விஜய்சேதுபதி நடிக்க இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு படக்குழுவினர்களிடமிருந்து விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விஜய்சேதுபதிக்காண சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. ’தளபதி 64’ படத்தில் வில்லனாக நடிப்பதற்காக விஜய்சேதுபதிக்கு ரூபாய் 10 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கே ரூ.8 கோடி தான் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு மாஸ் நடிகரின் திரைப்படமாக இருந்தாலும் அந்த படத்தில் வலுவான வில்லன் இருந்தால் மட்டுமே படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறும் என்பது தமிழ் சினிமாவின் வரலாறு. அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க இருப்பதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.