ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கும் விஜய் நாயகி

  • IndiaGlitz, [Wednesday,February 17 2016]
பிரபல பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே ஹாலிவுட் படம் ஒன்றில் வின் டீசலுடன் இணைந்து நடித்து வருகிறார் என்ற செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் மேலும் ஒரு பாலிவுட் நாயகியும் ஹாலிவுட்டுக்கு செல்கிறார். இளையதளபதி விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற்ற ப்ரியங்கா சோப்ராதான் ஹாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளார்.

பிரபல Wrestling வீரர் ராக் நடிக்கும் 'Baywatch' படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த செய்தியினை பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா வில்லி கேரக்டரில் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் Zac Efron அவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா ஆகியோர் அடுத்தடுத்து ஹாலிவுட் படங்களில் நடிப்பதால் பாலிவுட் ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More News

'இறைவி' பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறைவி' திரைப்படம் வரும் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த தகவலுக்கு படத்தயாரிப்பு...

சிவகார்த்திகேயன் பட டைட்டில் குறித்த முக்கிய தகவல்

கோலிவுட் திரையுலகில் மிக குறுகிய காலத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்த நாயகன் ...

அருள்நிதியின் ஆறாது சினம். சென்சார் மற்றும் ரிலீஸ் தேதி

ஈரம்' இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆறாது சினம்' படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து இன்று சென்சாருக்கு அனுப்பப்பட்டது...

'மருது' கிளைமாக்ஸ் படப்பிடிப்பில் விஷால் காயம்

கடந்த பொங்கல் தினத்தில் வெளியான 'கதகளி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் விஷால் நடித்து வரும் அடுத்த படமான ...

நொச்சிக்குப்பம் மீனவ பெண்களுடன் இறுதிச்சுற்று இயக்குனர்

மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் இயக்குனர் சுதா இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த 'இறுதிச்சுற்று' படம் மாபெரும் ஹிட்...