அமமுகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய பிரபல தயாரிப்பாளர்!

  • IndiaGlitz, [Tuesday,June 04 2019]

சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', ஜீவா நடித்த 'கீ', ஜெயம் ரவி நடித்த 'மிருதன்' உள்பட பல தமிழ்த்திரைப்படங்களை தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.

இவர் திரைப்படங்கள் தயாரிப்பதுடன் கடந்த சில ஆண்டுகளாக அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இணைந்து ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏவான இவர், பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். பின்னர் அதிமுகவின் ஒரு பிரிவாக தினகரனின் அமமுக மாறியபோது அமமுகவில் இணைந்தார்.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக வேட்பாளராக நெல்லையில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த நிலையில் நேற்று மைக்கேல் ராயப்பன் அமமுகவில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். இவருடன் அமமுகவினர் 15 பேர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'நம்ம டீம் இந்தியா': உலகக்கோப்பைக்காக ஜிவி பிரகாஷின் அசத்தல் பாடல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வரும் 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது

சிவகார்த்திகேயன் - 'அருவி' அருண்பிரபு படத்தின் குழுவினர் குறித்த தகவல்

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான 'கனா' சூப்பர்ஹிட் ஆனதை அடுத்து அவர் தயாரித்த இரண்டாம் தயாரிப்பு திரைப்படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு'

தம்பியை தூக்கில் தொங்கவிட்ட தந்தை, மொபைல் போனில் படம்பிடித்த மகள்!

தன் உடம்பிறந்த தம்பியை தனது தந்தையே தூக்கில் தொங்கவிட்ட கொடூர காட்சியை அவரது மகள் மொபைல் போனில் வீடியோ எடுத்த சம்பவம் ஒன்று பெங்களூர் அருகே நடந்துள்ளது.

'தனுஷ் 35' படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தை அடுத்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு படங்களை தயாரித்து வருகிறது என்பதும்

விஜய் ஆண்டனியின் 'கொலைகாரன்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி, அர்ஜூன் இணைந்து நடித்த 'கொலைகாரன்' திரைப்படம் கடந்த மாதமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.