close
Choose your channels

'நம்ம டீம் இந்தியா': உலகக்கோப்பைக்காக ஜிவி பிரகாஷின் அசத்தல் பாடல்

Monday, June 3, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி வரும் 5ஆம் தேதி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது. இந்த போட்டியை எதிர்பார்த்து இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த போட்டியின் தமிழ் வர்ணனை ஒளிப்பரப்பும் சேனல் ஒன்றுக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், 'நம்ம டீம் இந்தியா' என்ற பாடலை உருவாக்கி வருகிறார். இதன் புரமோ வீடியோவையும் அவர் சற்றுமுன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட்டோட கிரெளன்' என்று ஆரம்பிக்கும் இந்த பாடலின் முழு வடிவம், இந்திய அணியின் போட்டி தொடங்கும் நாளான ஜூன் 5ஆம் தேதி 2 மணிக்கு வெளியாகவுள்ளது. மீண்டும் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாழ்த்தும் ஜிவி பிரகாஷின் இந்த பாடல் நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.