5 தமிழ் நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடை.. பட்டியலில் யார் யார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


தயாரிப்பாளர் சங்க கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இந்த கூட்டத்தில் ஐந்து நடிகர்களுக்கு தடை விதிக்கப்படும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது என வெளிவந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் இதில் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த தேனாண்டாள் முரளி ’இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் குறிப்பாக தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத ஐந்து நடிகர்கள் பட்டியல் தயார் செய்துள்ளதாகவும் கூறினார்.
இது குறித்து நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் பேச்சு வார்த்தைக்கு பின்னர் பழைய நிலை தொடர்ந்தால் அவர்கள் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டு அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தடை விதிக்கப்படவுள்ள ஐந்து நடிகர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. இதில் நான்கு ஹீரோக்களும் ஒரு காமெடி நடிகர் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோ ஒருவரும், ஆக்சன் ஹீரோ ஒருவரும், ஒரு வில்லன் நடிகர், ஒரு வாரிசு நடிகர் மற்றும் ஒரு காமெடி நடிகர் இந்த பட்டியலில் இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Watch | "தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காமல் சில நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்"
Watch | "தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காமல் சில நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்"
— Sun News (@sunnewstamil) June 18, 2023
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி பேட்டி!#SunNews | #TamilNaduProducers pic.twitter.com/WCRsLjCYoQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments