close
Choose your channels

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: டிஆர் தோல்வி, வெற்றி பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

Monday, November 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நேற்று நடைபெற்றது என்பதும் மொத்தம் 1303 வாக்குகள் என்றாலும் 1050 பேர்கள் மட்டுமே வாக்களித்தனர் என்பது தெரிந்ததே. இதில் ரஜினிகாந்த் தனுஷ் உள்பட முக்கிய தயாரிப்பாளர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று வாக்குப்பதிவு முடிந்த நிலையில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. ஆரம்ப கட்ட முடிவில் டிஆர் பின்னடைவில் இருந்ததாகவும் விஜய் நடித்த மெர்சல் படத்தின் தயாரிப்பாளர் முரளி முன்னணியில் இருந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன

தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முரளி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மொத்தம் 557 வாக்குகள் கிடைத்துள்ளது. அதேபோல் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி ராஜேந்தருக்கு 337 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.