என்னால்‌ முடிந்தவரை உதவி வருகிறேன்: ராகவா லாரன்ஸின் தமிழ்ப்புத்தாண்டு அறிவிப்பு!

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் கொரோனா தடுப்பு நிவாரண நிதியாக ரூபாய் 3 கோடி அளித்திருந்த நிலையில் மேலும் பலர் தன்னிடம் தொலைபேசி மூலம் நிதி உதவி கேட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பை ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் அறிவிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

கொரோனா ஊரடங்கில்‌ கஷ்டத்தில்‌ இருக்கும்‌ மக்களுக்கு உதவுவதில்‌ தன்னார்வலர்களுக்கு எந்த தடையும்‌ இல்லை! என தமிழக அரசு தற்போது அறிவித்திருக்கிறது. இந்த நல்ல அறிவிப்பை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களுக்கும்‌, அதைப்பற்றி தெளிவாக, நடைமுறை விளக்கம்‌ தந்த உயர்திரு காவல்துறை ஆணையர்‌ அவர்களுக்கும்‌ எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக்‌கொள்கிறேன்‌!

அரசைப்‌ பொறுத்தவரை மக்களுக்கு கொரோனா வைரஸ்‌ பரவாமலும்‌ தடுக்க வேண்டும்‌, அதேநேரம்‌ மக்களுக்கு உணவுத்‌ தட்டுப்பாடு ஏற்படாமலும்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ என்கிற பெரும்‌ இக்கட்டான நிலை உள்ளது! ஆகவே, தமிழக அரசினால்‌ அறிவுறுத்தி சொல்லப்படும்‌ சமூக விலகலை கண்டிப்பாக பின்பற்றி, தன்னார்வலர்களும்‌, என்னுடைய ரசிகர்கள்‌ மற்றும்‌ திருநங்கைகள்‌, அபிமானிகள்‌ உள்பட அனைவரும்‌ கவனத்துடன்‌ செயல்பட வேண்டிய நேரமிது! நாம்‌ மக்களுடைய பசிப்பிணியையும்‌ போக்க வேண்டும்‌! அதேசமயம்‌ கொரோனா வைரஸ்‌ பரவாமலும்‌ அரசின்‌ அறிவுரைப்படி நாம்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌!

அந்த வகையில் இயலாத மக்களுக்கு இயன்றவரை உதவிடுங்கள்‌. நானும்‌ நமது தமிழக அரசின்‌ சமூக விலகல்‌ அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, என்னால்‌ முடிந்தவரை உதவி வருகிறேன்‌! அதைப்போலவே
அனைவரும்‌ உதவிடுவோம்‌! கொரோனாவை வென்றிடுவோம்‌!

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்கள்!

இன்று காலை 10 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியபோது ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்

'மாஸ்டர்' மாளவிகாவுக்கு டப்பிங் குரல் கொடுத்த தமிழ் நடிகை

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரபரப்பு

மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இன்றுடன் பிரதமர் மோடி அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு முடிவடைந்ததை அடுத்து சற்று முன் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

ஈவு இரக்கமின்றி கல்லால் அடித்து கொல்லப்பட்ட முதியவர்: சென்னையில் பயங்கரம்

சென்னையில் ஈவு இரக்கமின்றி மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை 30 வயது வாலிபர் ஒருவர் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற சிம்பு: மகத் வெளியிட்ட வீடியோ வைரல்

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வந்த 'மாநாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக