close
Choose your channels

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்ற சிம்பு: மகத் வெளியிட்ட வீடியோ வைரல்

Tuesday, April 14, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வந்த ’மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடித்தவுடன் மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் இந்த படத்திற்காக சிம்பு தாய்லாந்து சென்று உடல் எடையை குறைத்து வந்தார் என்பது தெரிந்ததே. ஆனால் தற்போது கொரோனா விடுமுறையில் சிம்பு வீட்டிலேயே இருப்பதால் அவருடைய உடல் எடை மீண்டும் அதிகரித்து விட்டதாக செய்திகள் வெளியானது

இதனை அடுத்து ரசிகர்கள் சிம்புவிடம் கோரிக்கை ஒன்றை அளித்தனர். ’மாநாடு’ படத்திற்காக நீங்கள் குறைத்த எடையை அப்படியே மெய்ண்டன் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிம்பு, தற்போது வீட்டிலேயே ஒர்க்கவுட் செய்வதாக தெரிகிறது

இது குறித்து சிம்புவின் நண்பரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், சிம்பு வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சிம்பு தனது வீட்டை சுற்றி ஓடி வருவது போன்று இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் போது ஸ்லிம் உடல் எடையில் இருக்க சிம்பு மிகத் தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறார் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிய வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.