முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தி!

காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான போது அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி ராகுல்காந்தி தென்னிந்தியாவில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு என்ற தொகுதியிலும் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ தகவல் வெளிவந்துள்ளது. எனவே மக்களவை தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார்.

ஏற்கனவே ராகுல்காந்தி கேரள மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோனி கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தியை வயநாடு தொகுதி மக்கள் வெற்றி பெற செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

More News

நயன்தாரா படத்தை ரீமேக் செய்யும் 'தோனி' இயக்குனர்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து நடித்த மலையாள் திரைப்படம் 'புதிய நியமம்'.

ஜெயலலிதா கேரக்டருக்கு அவர் செட்டாக மாட்டார்: ஸ்ரீரெட்டி

ஜெயலலிதா கேரக்டருக்கு கங்கனா' பொருந்தமாட்டார் என்று நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

சிவாஜியின் நடிப்பை குறை சொன்ன நாகேஷ்: 'வசந்த மாளிகை' டிரைலர் விழாவில் சுவாரஸ்யம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மிகப்பெரிய வெற்றிப்படம் 'வசந்தமாளிகை. கடந்த 1972ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை பிரகாஷ்ராஜ் இயக்கியிருந்தார்.

அரசியல் கேள்வி கேட்ட நிருபர்களுக்கு அறிவுரை கூறிய ரஜினி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரும் மக்களவை தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், தனது ரசிகர்கள் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் கூறினார்.

பொண்ணுங்க மேல கைய வச்சா செத்துருவோங்கிற பயம் வரணும்: '100' டீசர் விமர்சனம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், கோவை சிறுமி விவகாரம் உள்பட பல சம்பவங்கள் பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாலியல் பலாத்காரம் சம்பந்தமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்