ராஜமவுலியின் அடுத்த படத்தில் வித்தியாசமான முயற்சி

  • IndiaGlitz, [Thursday,July 05 2018]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய திரைப்படங்கள் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகின. இதுவரை வெளிநாடுகளில் இந்திய படங்கள் என்றால் இந்தி படங்களே என்று நினைத்து கொண்டிருந்தவர்களை தென்னிந்தியாவிலும் ஒரு திரையுலகம் இருக்கின்றது என்பதை நிரூபித்த படங்கள் தான் இவை இரண்டும்

இந்த நிலையில் பொதுவாக இயக்குனர்கள் தாங்கள் இயக்கிய ஹிட்டான படங்களின் அடுத்த பாகங்களைத்தான் இயக்குவது வழக்கம். ஆனால் எஸ்.எஸ்.ராஜமவுலி வித்தியாசமாக 'பாகுபலி' படத்தின் முந்தைய பாகங்களை இயக்கவுள்ளார். அதாவது 'பாகுபலி' படத்தின் ரம்யாகிருஷ்ணன் நடித்த சிவகாமி மற்றும் சத்யராஜ் நடித்த கட்டப்பா ஆகிய கேரக்டர்களின் முந்தைய காலத்திய கதையை சொல்ல போகிறார்.

மூன்று பாகங்களாக உருவாகும் இந்த படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்காக உருவாகவிருப்பதாகவும், அதில் இந்த படம் தொடராக வெளிவரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜமவுலியுடன் இணைந்து தேவகட்டா என்பவர் இயக்கவுள்ளார்.

எஸ்.எஸ்.ராஜமவுலி தற்போது ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் எல்.கே.ஜி, ரஜினி பேபி கிளாஸ்: அன்புமணி விமர்சனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு, மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் ஆகியவைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

இது நிச்சயம் கொலை தான்: 11 பேர் தற்கொலை குடும்பத்தில் உயிரோடு இருக்கும் ஒரே பெண் பேட்டி

டெல்லியில் நேற்று முன் தினம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆர்யாவின் 'கஜினிகாந்த்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'ஹர ஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள மூன்றாவது படம் 'கஜினிகாந்த்'.

ஆர்.கே.சுரேஷூக்காக இணையும் விஷால், விஜய் ஆண்டனி, ஆர்யா

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.கே.சுரேஷ். இவர் இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை மூலம்' நடிகராகவும் மாறினார். வில்லன் வேடத்தில் நடித்து

அடுத்தடுத்து வெளியாகும் பிரபலங்களின் திரைப்படங்கள்: ஒரு பார்வை 

இந்த ஆண்டின் முதல் பாதியில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் கோலிவுட் வேலைநிறுத்தம் காரணமாக பல புதிய திரைப்படங்கள்  வெளியாகவில்லை.