close
Choose your channels

ஆர்.கே.சுரேஷூக்காக இணையும் விஷால், விஜய் ஆண்டனி, ஆர்யா

Wednesday, July 4, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆர்.கே.சுரேஷ். இவர் இயக்குனர் பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை மூலம்' நடிகராகவும் மாறினார். வில்லன் வேடத்தில் நடித்து வந்த ஆர்.கே.சுரேஷ் தற்போது ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அவ்வாறு ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'வேட்டை நாய்

ஆர்.கே.சுரேஷ் நெகட்டிவ் ஹீரோவாக நடித்து வரும் இந்த படத்தை ஜெய்சங்கர் என்பவர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே அப்புக்குட்டி நடித்த 'மன்னாரு' என்ற படத்தை இயக்கியவர் .இந்த படத்தில் 'கடுகு' படத்தின் நாயகி சுபிக்சா நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசரை மூன்று பிரபல நடிகர்கள் இணைந்து வெளியிடவுள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் செய்தி வெளிவந்தது. அந்த மூன்று பேர் குறித்த சஸ்பென்ஸ் தற்போது வெளிவந்துள்ளது. விஷால், விஜய் ஆண்டனி மற்றும் ஆர்யா ஆகியோர்கள் தான் அந்த மூன்று பேர். நாளை மாலை 4.30 மணிக்கு இந்த மூவரும் இணைந்து 'வேட்டை நாய்' படத்தின் டீசரை வெளியிடவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.